மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1371 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1371 days ago
சென்னை: தை அமாவாசையை ஒட்டி சக்தி பீட சுற்றுலா ரயிலை ஐ.ஆர்.சி.டி.சி. இயக்குகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஜன. 21ல் புறப்பட்டு திண்டுக்கல் திருச்சி கரூர் ஈரோடு சேலம் ஜோலார்ப்பேட்டை மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும்.இப்பயணத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள கோல்கட்டா காளிதேவி கோவில் அசாமில் கவுகாத்தி காமாக்யா தேவி உத்தர பிரதேசத்தில் காசி விசாலாட்சி அலகாபாத்தில் அலோபி தேவி ஒடிசாவில் புரி பிமலாதேவி பீகாரில் கயா மங்களகவுரி சக்தி பீடங்களுக்கு சென்று வரலாம். இப்பயணத்தின் போது தை அமாவாசையன்று கயாவில் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து விஷ்ணு பாதமும் தரிசிக்கலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 12 ஆயிரத்து 285 ரூபாய் கட்டணம்.சுற்றுலா செல்ல விரும்புவோர் சென்னையில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை 9003140680 மதுரை 9003140714 திருச்சி அலுவலகத்தை 8287931974 என்ற மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். irctctourism.com என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
1371 days ago
1371 days ago