மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1371 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1371 days ago
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா நாளை துவங்குகிறது. அன்னூரில் பிரசித்தி பெற்ற மன்னீஸ்வரர் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்த்திருவிழா நாளை கிராம தேவதை வழிபாடு உடன் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடும், இரவு 7:00 மணிக்கு, கிராம சாந்தி செய்தலும் நடக்கிறது.வருகிற, 10ம் தேதி காலையில் கணபதி வேள்வியும், காலை 9:00 மணிக்கு கொடியேற்றமும், இதையடுத்து தேர்வீதியின் வழியாக சுவாமி புறப்பாடும், மாலையில் யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினமும் மாலையில், சூரிய, சந்திர, பூத, புஷ்ப வாகனங்களில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், மாலையில், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. 16ம் தேதி காலை 7:00 மணிக்கு, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 10:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் துவங்குகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், திருமுருகன் அருள்நெறி கழகத்தினரும் செய்து வருகின்றனர்.
1371 days ago
1371 days ago