கூராங்கோட்டையில் கொடி மரம் கும்பாபிஷேக விழா
ADDED :1442 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கோயில் முன்புறம் 16 அடி உயரமுள்ள தேக்கு மரத்தால் ஆன கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. கொடி மரத்தை செம்பு காப்பு அமைக்கப்பட்டிருந்தது. நேற்று (டிச., 7) முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 9:30 மணியளவில் கொடிமரத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் தர்ம முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் நிர்வாக டிரஸ்டியினர் செய்திருந்தனர்.