விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேர் முகூர்த்த பூஜை
ADDED :1504 days ago
கடலூர்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மாதம் நடக்க விருக்கும் தேர் திருவிழாவிற்கு தேர் முகூர்த்த பூஜை நடந்தது.
பிரசித்தி பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலிலும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் கோவிலிலும் உற்சவம் நடைபெறும். இக்கோவிலில் மாசி மாதம் நடக்க விருக்கும் தேர் திருவிழாவிற்கு தேர் முகூர்த்த பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.