சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சம்பக சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :1430 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10ம் ஆண்டு சம்பக சஷ்டி பைரவ திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,கும்ப பூஜை,ஹோமம் நடந்தது.அதன்பின்பு பைரவருக்கு பால்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பைரவர் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் உத்திரகோசமங்கை சரக பொறுப்பாளர் சரண்யா தலைமை வகித்தார்.முதுகுளத்தூர் சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.