மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை
ADDED :1497 days ago
மானாமதுரை : மானாமதுரை அருகே தெக்கூரில் மிளகாய் சாந்து சித்தர் முத்திருளாண்டி சுவாமி குருபூஜை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றனர்.பெரியகோட்டை, வேம்பத்தூர் தெக்கூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்புற பக்தர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர்.