உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த கிராம கோயில்களுக்கு புனரமைப்பு நிதி

சிதிலமடைந்த கிராம கோயில்களுக்கு புனரமைப்பு நிதி

வடமதுரை: வெள்ளபொம்மன்பட்டியில் ஒன்றிய கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சிறப்பு கூட்டம் நடந்தது.‌ வடக்கு ஒன்றிய அமைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, திண்டுக்கல் நகர அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் கிராம கோயில் பூசாரிகளுக்கு அறநிலையத் துறை மூலம் நல வாரிய அடையாள அட்டை, 60 வயது பூர்த்தியான பூஜாரிகளுக்கு ஓய்வூதியம், சிதிலமடைந்த கிராம கோயில்களுக்கு புனரமைப்பு நிதியுதவி, பூஜாரிகளுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும். கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம், பூஜாரிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. பாகாநத்தம் ஊராட்சி அமைப்பாளர் பூசைமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !