ராமேஸ்வரத்தில் இலவச கங்கை தீர்த்தம் : பக்தர்கள் ஆர்வம்
ADDED :1402 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பஜ்ரங்தாஸ்பாபா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக கங்கை தீர்த்தம் வழங்கினர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலில் விற்கும் கங்கை தீர்த்தத்தை வாங்கி சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரிசிப்பார்கள். கொரோனா ஊரடங்கு பின் கங்கை தீர்த்தம் பெறுவதில் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை.பக்தர்கள் கங்கை தீர்த்தம் இன்றி தரிசிப்பதை தவிர்க்க, நேற்று முதல் ராமேஸ்வரம் சன்னதி தெருவில் உள்ள பஜ்ரங்கதாஸ்பாபா சேவா அறக்கட்டளை சார்பில் நிர்வாகி சீதாராம்தாஸ் பாபா பக்தர்களுக்கு தலா 200 மி.லி., கொண்ட கங்கை தீர்த்தம் பாட்டிலை இலவசமாக வழங்கினார். தினமும் 200 பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். இதில் ஹிந்து முன்னணி பொதுசெயலாளர் ராமமூர்த்தி கலந்து கொண்டார்.