உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோடியால் புனித ஸ்தலமான காசி பொலிவாகும்

மோடியால் புனித ஸ்தலமான காசி பொலிவாகும்

ஊட்டி: அனைத்து தரப்பினராலும் புனித ஸ்தலமாக போற்றப்படும் காசியை, சீர்படுத்த பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். என, பா.ஜ., மாநில இளைஞர் அணி பொருளாளர் தெரிவித்தார். பா.ஜ., மாநில இளைஞர் அணி பொருளாளர் முருகானந்தன் நிருபர்களிடம் கூறுகையில்," உலக மக்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் பிரசித்தி பெற்ற காசியின் புனித ஸ்தலத்திற்கு வந்து செல்கின்றனர். அந்த புனித ஸ்தலத்தை சீர்படுத்தி, புனரமைக்க பிரதமர் மோடி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். இது சம்மந்தமாக வரும், டிச., 13ம் தேதி காசியில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், தர்மசீலர்கள், மகான்கள், அறிவுசார் வல்லுனர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். ஊரக நகர்புற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணிகள் முனைப்புடன் நடந்து வருகிறது. இவ்வாறு, முருகானந்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !