வாணிய சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1399 days ago
வேடசந்தூர் : வேடசந்தூர் பெரிய கடை வீதியில் உள்ள வாணிய சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜையை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நேற்று காலை புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.