கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திருவூடல் விழா நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 5:00 மணியளவில் மூலவர் ராமநாதீஸ்வரர், சவுந்தர்ய ஞானாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின். உற்சவ மூர்த்திகள் ஞானாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமிகள் சூரிய பகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தமிழ் வேதவார வழிபாட்டு சபை சார்பில் தேவார திருவாசகப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அய்யப்ப சேவா சங்கம், கிருபானந்த வாரியார் அறக் கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல், சிவாச்சாரியார்கள், உபய தாரர்கள், ஊர் மக்கள் செய்தனர்.