ராமேஸ்வரம் கோயிலில் வீல்சேரில் வரும் பக்தருக்கு சிக்கல்
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வீல்சேரில் வந்த வயதுமூத்த குஜராத் பெண் பக்தருக்கு, பூட்டிய கேட்டை ஊழியர்கள் திறக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
குஜராத் காந்தி நகர் சேர்ந்த பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர், இதில் வயது மூத்த பெண்பக்தர் ஒருவர் நடக்க முடியாத சூழலில், அங்குள்ள வீல்சேரில் அழைத்துச் சென்றனர். மற்ற பக்தர்கள் ரூ. 200 கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு அம்மன் சன்னதிக்கு சென்றனர். வீல்சேரில் இருந்த பெண் பத்தரை உதவியாளர் ஒருவர் மூலம் பிரகாரத்தில் அழைத்து வந்தபோது கேட் பூட்டி கிடந்தது. அப்போது கேட்டை திறக்கும்படி உறவினர்கள் வலியுறுத்தினர். அதற்கு கோயில் ஊழியர்கள், பூடடிய கேட்டை திறக்க முடியாது, திரும்பி செல்லுங்கள் செல்லுங்கள் என கறாராக கூறியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த பக்தர்கள், வீல்சேரில் இருந்த பெண் பக்தர் அம்மனை தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். பல கி.மீ., தூரம் கடந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த குஜராத் பெண் பக்தர், பர்வதவர்த்தினி அம்மனை தரிசிக்க முடியாமல் சென்ற சம்பவம், பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.