அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :24 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், தை பொங்கல் விழாவையொட்டி இரண்டு நாட்களாக சிறப்பு வழிபாடு நடந்தது. தை முதல் நாளையொட்டி நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு தொடங்கி, மூலவர் பெருமாளுக்கும் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:00 மணிக்கு தொடங்கி இரவு 9:00 வரை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு தொடங்கி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.