நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர், கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :29 minutes ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கோவில்களில் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். இதே போன்று, நெல்லிக்குப்பம் கைலாசநாதர், பூலோகநாதர், நடனபாதேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தன.