வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1497 days ago
வடமதுரை: வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி பிரதான கலச பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடந்தன. திருச்சி ரோடு ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பிரச்னையால் வழக்கமாக வருடாபிஷேக விழாவிற்காக ஆண்டுதோறும் இங்கு நடக்கும் முளைப்பாரி, பால் குட ஊர்வலங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.