உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம்: காத்திருந்து தரிசனம்

பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம்: காத்திருந்து தரிசனம்

பழநி: பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்ப, முருக பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. நீண்ட வரிசையில் வின்ச் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். ரோப், வின்ச், படிப்பதை வழியே பக்தர்கள் மலை மீது சென்று பழநியாண்டவரை தரிசித்தனர். வாகனங்கள் முறையான நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தனர். கிரிவீதி, ஜவஹர் வீதி பகுதியில் வாகனங்கள் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமம் அடைந்தனர். முறையாக அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில மட்டும் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !