உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

திருத்தணி நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

திருத்தணி: நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நவகிரக ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கலச ஹோமமும் நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், கலச ஊர்வலமும் நடந்தது. பின், மூலவர் அம்மன் மீது கலசநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, அங்கிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, கலசநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில், சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !