திருவாடானை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :234 days ago
திருவாடானை: திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினார்கள். கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.