உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தங்கள் கருநெல்லி நாதர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

திருத்தங்கள் கருநெல்லி நாதர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி ரத வீதியில் தங்கரத பவனி வந்தது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமிகள் தினமும் இரவு 7:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். ஏழாம் நாள் திருவிழாவில் தபசு காட்சி நடைபெறும். பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். மறுநாள் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !