உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்ர காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா

வீரபத்ர காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா

ரிஷிவந்தியம்: வாணாபுரம் ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.


வாணாபுரம் சித்தேரி கரையில் 23 அடி உயரமுள்ள வீரபத்ர காளியம்மன் மற்றும் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாத அமாவாசையையொட்டி மயான கொள்ளை திருவிழா இன்று நடந்தது. காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, காளி மற்றும் சக்தி அம்மன் வேடமணிந்தவர்கள் கோவிலில் இருந்து மயானம் உள்ள பகுதிக்கு சென்றனர். மயானத்தில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு கண் திறப்பு மற்றும் முப்பூசைகள் நடந்தது. தொடர்ந்து படையலிட்ட எலுமிச்சை பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல் சூறையாடப்பட்டன. இதனை ஏராளமான பக்தர்கள் பிடித்தனர். மயானக்கொள்ளை முடிந்ததும், வீரபத்ர காளியம்மன் சுவாமி வீதியுலா நடந்தது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !