சூரிய வாகனத்தில் மன்னீஸ்வரர் உலா
ADDED :1730 days ago
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவில், சூரிய வாகனத்தில், மன்னீஸ்வரர் உலா நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலையில், சூரிய வாகனத்தில், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இரவு சந்திர வாகனத்தில் உட்பிரகாரத்தில் உலா நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி உட்பிரகார உலாவும், 14ம் தேதி காலை 10:30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது, மாலை 6:30 மணிக்கு விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் உலா உட்பிரகாரத்தில் நடக்கிறது.