சிதிலமடைந்த பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயில் தேர்
ADDED :1444 days ago
நெல்லை: பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயில், பிரம்மாவின் பேரன் ரோமசமுனிவர் வழிபட்ட தலம். இக்கோயிலில், பங்குனி பிரமோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, 11 நாட்கள் நடக்கும். இத்திருவிழாவின் 9ம் நாள் தேரோட்டம் நடக்கும். ஆரம்ப காலத்தில் சுவாமி, அம்பாள் தேர் தனித்தனியாக இருந்துள்ளது. இதற்கு சாட்சியாக 2 தேர் மண்டபங்கள் உள்ளன. பின்பு, ஒரேதேரில் சுவாமி, அம்பாள்எழுந்தருளி வலம் வந்துள்ளனர். தற்போது, இத்தேர் முழுமையாக சிதிலமடைந்து, உருக்குலைந்து உள்ளது. கடந்த1979க்கு பின்பு, சுமார் 42 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. தேர்மண்டபமும் கல்கள்பெயர்ந்து, ஆபத்தான நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. புதிய தேர்செய்து தேரோட்டத்தை நடத்த வேண்டுமென ஆன்மிக அன்பர்கள் எதிர்பார்க்கின்றனர்.