ராமேஸ்வரம் கோயிலுக்குள் தேங்கி மழைநீர்; பக்தர்கள் அவதி
ADDED :14 minutes ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் அவதிப்பட்டனர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளியுடன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் பகுதியில் இன்று பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் நோயாளிகள் சிரமப்பட்டனர். ராமநாதசுவாமி கோயில் முதல் பிரகாரத்தில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாம்பன் தரவைத்தோப்பு, சின்னப்பாலம், மண்டபம் எருமைதரவை ஆகிய பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.