கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :1504 days ago
பொள்ளாச்சி: கரிவரதராஜ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோவிந்தா முழக்கத்துடன் கோலாகலமாக நடந்தது.
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கோவிந்தா கோஷம் முழங்க, பெருமாளை தரிசித்தனர்.