காஞ்சி மடாதிபதி திருமலையில் வழிபாடு
ADDED :1441 days ago
திருப்பதி: திருமலையில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று வழிபட்டார்.காஞ்சி மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், திருமலை ஏழுமலையானை வழிபட்டார். முன்னதாக ஏழுமலையான் கோவிலுக்கு வந்த அவரை, கோவில் மரியாதை அளித்து தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். கொடி மரத்தை வணங்கி கோவிலுக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு அதிகாரிகள் தீர்த்தம், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.