சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் லட்சார்ச்சனை நிறைவு
ADDED :1503 days ago
கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பசாமி கோவில் லட்சார்ச்சனை நிறைவு விழாவில் கபளக்கலசம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், லட்சார்ச்சனை மஹாயக்ஞம் பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை 1ம் தேதியில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். கோவிலில், தினமும் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. லட்சார்ச்சனை நிறைவு விழாவில் கபளக்கலசம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.