பழநியில் மார்கழி மாத அதிகாலை பஜனை துவக்கம்
ADDED :1468 days ago
பழநி: பழநியில் மார்கழி மாத அதிகாலை பஜனை துவங்கியது. பழநி, அ.கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் பஜனை நேற்று முதல் துவங்கியது. மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து பஜனை பாடல்கள் பாடி தெரு முழுவதும் வலம் வருவதால் ஊர் முழுவதும் செழிக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் பழநி, அ.கலையம்புத்தூர்,, அக்ரஹாரம் பகுதியில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் தெரு முழுவதும் கீர்த்தனைகள், திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாடி சுற்றி வருவர். நேற்று மார்கழி மாதம் துவங்கியது முன்னிட்டு அக்ரஹரம்ம் பகுதி கோயிலில் துவங்கிய பஜனை குழுவினர் பாடல்களை பாடியபடி வந்தனர். மார்கழி மாதம் முடியும் வரை பஜனைப்பாடல்கள் தொடர்ந்து அக்ரஹாரம் தெருவில் பாடப்படும்.