உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவடிக்குப்பம் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கருவடிக்குப்பம் கோவிலில் பிரதோஷ வழிபாடு

புதுச்சேரி,-கருவடிக்குப்பம் குருசித்தானந்த சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை, கருவடிக்குப்பத்தில், பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, விழா அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், தேவசேனா குருக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !