உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தொற்றால், கடந்த, 2020 மார்ச் முதல் கிரிவலம் செல்ல தொடர்ந்து, 22வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  மார்கழி மாத பவுர்ணமி திதி நேரமான இன்று காலை, 8:15 முதல், நாளை காலை, 10:22 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல, மாவட்ட கலெக்டர் முருகேஷ் தடை விதித்திருந்தார். ஆனால், அதை மீறி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலினுள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இரண்டு மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !