உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தின சபை: திருவலாங்காடு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம்

ரத்தின சபை: திருவலாங்காடு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம்

திருவள்ளூர்: திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மகா அபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர், திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜபெருமானின் பஞ்ச சபைகளில் ரத்தின சபையாகும். ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என பல வகையான அபிஷேகங்கள் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !