குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு
ADDED :1397 days ago
உடுமலை : உடுமலை குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.