மனித உடம்பும், நடராஜர் சன்னதியும்
ADDED :1416 days ago
மனிதனின் உடல் அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமைகள் பல உண்டு.
சிதம்பரம் நடராஜர் சன்னதியில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 ஓடுகள் மனிதன் ஒருநாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும். அங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் மனித உடம்பிலுள்ள நாடி நரம்புகளைக் குறிக்கும். கோயிலில் உள்ள 9 துவாரங்கள் உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கும். ஐந்தெழுத்து மந்திரமான ‘சிவாய நம’ என்பதன் அடிப்படையில் இந்த சன்னதியில் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்து மரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் ஜன்னல்களும், 4 வேதம், 6 சாஸ்திரம், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் துாண்களும் உள்ளன.