ரமணர் பகவானின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழா
ADDED :1388 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ரமணர் ஆஸ்ரமத்தில் ரமணரின், 142ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. திருவண்ணாமலை, செங்கம் சாலையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில், ரமணர் பகவானின், 142ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு, பகவான் ரமணர் லிங்கத்திற்கு சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தது. மேலும், மஹன்யாச ருத்ர ஜபம், தனுர் மாத பாராயணம், ஜெயந்தி தின சிறப்பு பாராயணம், ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள், ரமணரின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பகவான் ரமணரின் கீர்த்தனைகளை பாடினார்.