திண்டிவனம் வியாகுல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
ADDED :1455 days ago
திண்டிவனம்: திண்டிவனம் வியாகுல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா பங்குதந்தை சவரிமுத்து தலைமையில் நடக்கிறது.
நூத்தி நாற்பத்தி ஆறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் நடக்க உள்ள கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஆலய உள் வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பெரிய சைஸ் ஸ்டார் வாயிலின் முகப்பில் கட்டப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நடக்கும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தை சவரிமுத்து 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தையை ஏசு சொரூபத்தை கைகளில் ஏந்தி வந்து இரவு 11:46 மணிக்கு குடிலில் வைக்கிறார் அதன்பின் தொடர்ந்து திருப்பலி நடக்கிறது.