மருதமலை கோவிலில் தல வரலாறு புத்தகம் விநியோகிக்க வேண்டும்
ADDED :1354 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தல வரலாறு புத்தகம் வினியோகிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையுடன் இணைந்துள்ள இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், அத்தலத்தின் வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தல வரலாறு புத்தகம் வினியோகிக்கப்படுகிறது. அதேபோல, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இத்தலத்தின் வரலாறு தெரிந்து கொள்வதற்கு, கோவிலில் தல வரலாறு புத்தகம் வினியோகிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.