உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் குருபூஜை: 10 ஆயிரம் பேருக்கு "சாலை விருந்து"

சத்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் குருபூஜை: 10 ஆயிரம் பேருக்கு "சாலை விருந்து"

தஞ்சாவூர், கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் 15வது குருபூஜையை முன்னிட்டு, 10 ஆயிரம் பேருக்கு "சாலை விருந்து" வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சீனிவாசநல்லுாரில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகள் அவதரித்தார். இங்கே அவரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் அருகே ஆண்டு தோறும் டிச.23ம் தேதி குருபூஜையை முன்னிட்டு சாலை விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி  ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் குரு பூஜையை முன்னிட்டு 15வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி சத்குரு ஸ்ரீ சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை, காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு சிற்றுண்டியாக, பொது சாலை விருந்தாக 10 ஆயிரம் பேருக்கு, வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் சாலை விருந்து குழு தலைவர் உலகேஸ்வரி  குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !