உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதயாத்திரை பக்தர்களுக்காக சிறப்பு யாகம்

பாதயாத்திரை பக்தர்களுக்காக சிறப்பு யாகம்

பழநி: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக சிறப்பு யாக பூஜை துவங்கியது. பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையை பக்தர்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் வரும் பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி மலைக்கோயில் மற்றும் உப கோயில்களில் சிறப்பு யாக பூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதல் முதற்கட்டமாக நேற்று (டிச.23) மலைக்கோயிலில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு கணபதி ஹோமத்துடன் அனுக்ஞை பூஜைகள் தொடங்கின. ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தீபாரதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தினமும் உபகோயில்களில் யாக பூஜைகள் நடைபெறும். இந்நிகழ்ச்சியை தமிழக பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹரமுத்தய்யர் தலைமையில் நடைபெற்றது. இன்று (டிச.24) வீர துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !