அகஸ்தியர் ஜெயந்தி: ஈஷா யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி
தொண்டாமுத்தூர்: அகஸ்தியர் ஜெயந்தி தினத்தையொட்டி, ஈஷாவில் உள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நடந்தது.
ஆதியோகி முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு, அகஸ்தியர் ஜெயந்தியையொட்டி, சப்த ரிஷி ஆரத்தி நடந்தது. காசி, விஸ்வநாதர் கோவிலில் இருந்து வந்த, 7 உபாசகர்கள், யோகேஸ்வர லிங்கத்தை சுற்றி அமர்ந்து, சந்தனம், புனிதநீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால், யோகேஸ்வர லிங்கத்தை அலங்கரித்தனர். அதனை தொடர்ந்து, மந்திர உச்சாடனைகளுடன் நிகழ்த்திய செயல்முறை சக்திநிலையில், பிரம்மாண்ட தன்மையை அந்த சூழல் உருவாகியது. சப்தரிஷி ஆரத்தியானது, சிவனின், ஏழு சீடர்களான சப்தரிஷிகள், சிவனது அருளை பெறுவதற்காக, அவர்களுக்கு சிவன் கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடுத்தபடியாக, ஆதியோகியில் ஆண்டுதோறும் சப்தரிஷி ஆரத்தி நடந்து வருகிறது.