நாகமலை ஐயப்பன் கோயில் 49 வது ஆண்டு மண்டல பூஜை
ADDED :1736 days ago
புதுக்கோட்டை: நாகமலை ஆனந்த ஐயப்பன் கோயில் 49 வது ஆண்டு மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கணபதி, சாஸ்தா ஹோமம், பூர்ணாகுதி, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, ஊஞ்சல் சேவா தரிசனம் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை குருசுவாமி சோமசுந்தரம், மேல்சாந்தி கோபால், துணை குருசுவாமிகள் சின்னன், ஜெகநாதன் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.