உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரண கோஷத்துடன் தர்மசாஸ்தா திருக்கல்யாணம் கோலாகலம்

சரண கோஷத்துடன் தர்மசாஸ்தா திருக்கல்யாணம் கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில், புஷ்கலா தேவி சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாணம் நடந்தது.கேரளா மாநிலம் ஆரியங்காவு கோயிலுக்கு அடுத்தபடியாக, பரமக்குடி தரைப்பாலம் அருகில்தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். டிச., 24 இரவு 7:00 மணிக்கு நிச்சயதார்த்தம், விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்தன.நேற்று காலை 10:35 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மேளதாளத்துடன்நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல் நிறைவடைந்தது, 11:30 மணிக்கு புஷ்கலா தேவி சமேத தர்ம சாஸ்தாவுக்கு திருக்கல்யாணம் நடந்தது.தீபாராதனை நிறைவடைந்து பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பட்டு பல்லக்கில் தாயாருடன் சுவாமி வீதி வலம் வந்தார். ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்கம் மற்றும் திருக்கல்யாண விழா கமிட்டியினர் செய்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !