ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 10,55,063 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ADDED :1460 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந் தேதி திருநெடுந்தாண்டத்துடன் தொடங்கி நம்மாழ்வார் மோட்சம் வரை 21 நாட்கள் விமரிசையாக நடந்தேறியது. இந்த விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதன்படி விழா தொடங்கி 10 லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் பக்தர்கள் வருகை புரிந்து பெருமாள் தரிசனம் செய்துள்ளனர்.