விழுப்புரம் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மண்டல பூஜை விழா
ADDED :1413 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பி.என்., தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு 40வது மண்டல பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு மகா அபிேஷகம், காலை 11:50 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, தரிசனம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு சிறப்பு பஜனையும், இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று, கீழ்பெரும்பாக்கம் சபரிகிரிசன் கோவிலில் குருசாமிகள் பாலு, மணிகண்டன் தலைமையில் நடந்த சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜையில், ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சபரிகிரிசன் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.