சிவகாசி ஐயப்பன் கோவிலில் 1008 குத்துவிளக்கு பூஜை
ADDED :1643 days ago
சிவகாசி: சிவகாசி ஐயப்பன் கோவிலில் 24 ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு 1008 குத்து விளக்கு பூஜை நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜை, சுவாமி அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு முதல் நாளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருள்மிகு ஐயப்பன் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.