திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :4943 days ago
சிவகாசி:திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .திருத்தங்கல் பெருமாள் கோயில் ஆனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினம் சுவாமி, அம்பாள், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்டதேரில் சுவாமி, செங்கமலத்தார் உற்சவர் வீற்றிருக்க, தேர் முன் பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாடல்கள் பாடியபடி கோலாட்டம் நடனம் ஆடி செல்ல, தேரானது முக்கிய ரத வீதிகளில் பவனி வந்தது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வடம் பிடித்து துவக்கி வைத்தார்.