திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம் கோவிட் சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று, கோவிட் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாராயணவனம், நாகலாபுரம், கார்வேட்டி நகரம், நகரி உள்ளிட்ட கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் திறக்கப்பட உள்ளது. இதை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரள்வர். தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், பக்தர்கள் கோவிட் தடுப்பூசி, இரண்டு டோஸ் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கோவிட் பரிசோதனை மேற்கொண்டதற்கான நெகட்டிவ் சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சான்றிதழ்களை கோவில் வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்த பின்னரே, பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.