உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை புறப்படுவதில் ஐயப்ப பக்தர்கள் குழப்பம்

சபரிமலை புறப்படுவதில் ஐயப்ப பக்தர்கள் குழப்பம்

கன்னிவாடி: கேரளாவில் இரவு நேர ஊரடங்கால் குழப்பமடைந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலை புறப்பாட்டை ஒத்தி வைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

சபரிமலை தரிசனத்திற்காக ஐயப்பன் தரிசனத்திற்காக, கார்த்திகை முதல் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். வசதிக்கேற்ற நாட்களில் இணையதளம் வழியே முன்பதிவு செய்து, இருமுடி கட்டி புறப்படுகின்றனர். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது. இச்சூழலில் கேரளா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு டிச. 30(இன்று) முதல் ஜன 2 வரை அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து சபரிமலை புறப்படுவது தொடர்பாக ஐயப்ப பக்தர்கள் இடையே பரவலாக குழப்பம் நிலவுகிறது. ஐயப்ப பக்தர்கள் சிலர் கூறுகையில், "இரவு நேர ஊரடங்கு அறிவிப்பால் பயணத்தின் இடையே தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது பரவலாக தரிசனத்திற்காக புறப்படுவதா, ஒத்தி வைப்பதா என்பது தொடர்பாக உள்ளூர் குழுவினர் ஆலோசித்து வருகிறோம்," என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !