ஈஷா நடத்தும் இலவச யோகா வகுப்பு
ADDED :1515 days ago
கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், தமிழகம் முழுதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில், ஜன., 2 மற்றும் 3ம் தேதிகளில், இலவச யோகா வகுப்பு நடக்கிறது.
இரண்டு நாட்களும் காலை 6:30 முதல் 8:15 மணி வரையும், பகல் 11:30 முதல் 1:15 மணி வரையும், மாலை 5:30 முதல் 7:15 மணி வரையும் என மூன்று நேரங்களில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இப்பயிற்சியில், ஏழு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால், 8300099555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சத்குரு கூறுகையில், உங்களுக்குள் உள்ள சூரியனை நீங்கள் யோகா வழி துாண்டினால், உங்கள் உடல் ஒளி வீசி பிரகாசிக்க துவங்கும், என்றார்.