உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கில புத்தாண்டு திருப்பலியில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்

ஆங்கில புத்தாண்டு திருப்பலியில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி மாதா கோவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில், பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்குமாறு கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியுள்ளார்.

அவரது செய்தி குறிப்பு : புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதியிலும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு தொடக்க ஆராதனை திருப்பலி நிகழ்ச்சியில் பக்தர்கள் நேரடியாக வருவதைத் தவிர்க்க வேண்டும். தேவாலயம் மூலம் ஒளிபரப்பப்படும் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சி வழியாக வீடுகளில் கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !