வேலம்பட்டி ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :15 hours ago
நத்தம்: வேலம்பட்டி ஐயப்பன் கோயில் மஞ்சமாதா அம்மனுக்கு விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஐயப்பசுவாமி , மஞ்சமாதா அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து உலக நன்மை, மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வஹிந்துபரிஷத் நகர பொறுப்பாளர் தியாகராஜன்,பக்தர்கள் செய்திருந்தனர்.