உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர்

விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர்

உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் விபூதி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.


இத்தல இறைவன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க இத்தலத்தில் மார்கழி வழிபாடு நடந்து வருகிறது. விழாவில் இன்று அர்ச்சுனேஸ்வரர் விபூதி அலங்காரத்தில் அருள்பலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !